For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து மேலும் இரண்டு நாட்களுக்கு ரத்து!!

09:45 PM Nov 16, 2023 IST | Web Editor
மேட்டுப்பாளையம்   குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து மேலும் இரண்டு நாட்களுக்கு ரத்து
Advertisement

மன்சரிவை சீரமைக்கும் பணி தொடர்வதால் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து மேலும் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த ஒரு வார காலமாக வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலை ரயில் பாதையில் தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. மலை ரயில் பாதை அமைந்துள்ள கல்லார், ஆடர்லி, ஹில்கிரோ உள்ளிட்ட பகுதிகளில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து மலை ரயில் தண்டவாளம் சேதமடைந்துள்ளது.

இதனையடுத்து சேதமடைந்த ரயில் பாதையை ரயில்வே ஊழியர்கள் சீரமைத்து வந்தனர். இருப்பினும் பணிகள் முழுமையடையவில்லை அதே சமயத்தில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே ஒரு வாரத்திற்கு முன் 16 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நாளை மலை ரயில் போக்குவரத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து
துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேலும் இரண்டு தினங்களுக்கு
மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி வரும் 18 ஆம் தேதி வரை மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ள ரயில்வே நிர்வாகம்
சீரமைப்பு பணிகள் தொடர்வதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

16.11.2023 MTP HILL TRAIN CANCEL

Tags :
Advertisement