For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மாறி மாறி உணவு ஊட்டிக்கொண்ட மாமியார், மருமகள்கள் - கள்ளக்குறிச்சியில் "பாச மழை"!

04:59 PM Mar 08, 2024 IST | Jeni
மாறி மாறி உணவு ஊட்டிக்கொண்ட மாமியார்  மருமகள்கள்   கள்ளக்குறிச்சியில்  பாச மழை
Advertisement

மகளிர் தினத்தை முன்னிட்டு தனியார் உணவகம் அறிவித்த ஆஃபர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

மாமியார் - மருமகள்...  தமிழ்நாட்டில் இந்த காம்போ பற்றி கேட்டால் அனல் பறக்கும் கருத்துகள் வரும்.  சில இடங்களில் இருவருக்கும் இடையே அதீத அன்பு இருப்பதையும், சில இடங்களில் கருத்து முரண்பாடுகள், வேறுபாடுகள் இருப்பதையும் காண முடியும். அப்படிப்பட்ட மாமியார் - மருமகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்த வேண்டும், சின்ன விரிசல் இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் தனியார் உணவகம் வெளியிட்ட அறிவிப்பு பலரையும் கவர்ந்துள்ளது.

சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் என பல்வேறு துறைகளில் பெண்கள் அளிக்கும் பங்களிப்பை கெளரவப்படுத்தும் விதமாக ‘உலக மகளிர் தினம்’ கொண்டாடப்படுகிறது.  பாலின சமத்துவம், சம உரிமை, சம ஊதியம், சம வாய்ப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் விதமாகவும் இந்த நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உலகளவில் மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு முன்னெடுப்புகள், அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.  அந்த வகையில் தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியில் இயங்கி வரும் தனியார் உணவகம்,  அசத்தலான ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது.

கச்சேரி சாலையில் இயங்கி வரும் அந்த உணவகம்,  மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்ற ஆஃபரை அறிவித்துள்ளது.  ஆனால், மாமியார் - மருமகள் ஜோடியாக வரவேண்டும்,  மாமியார் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் உணவு ஊட்டிவிட வேண்டும்,  அப்போதுதான் உணவுக்கு காசு கொடுக்க தேவையில்லை என்ற கண்டிஷனையும் போட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து, உணவகத்திற்கு ஏராளமான மாமியார்கள் தங்களது மருமகள்களுடன் இன்று வருகை தந்தனர்.  மாமியார் தனது மருமகளுக்கும், மருமகள் தனது மாமியாருக்கும் உணவு ஊட்டிவிட்டது காண்போரை மகிழ்ச்சியிலும், நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.

இதையும் படியுங்கள் : மாநிலங்களவை உறுப்பினராக சுதா மூர்த்தி நியமனம் - யார் இவர்?

பெரும்பான்மையான தொலைக்காட்சி தொடர்களில் மாமியார் - மருமகள் இடையே கசப்பான உறவு இருப்பதாக சித்தரித்து காட்டப்படுகிறது.  இதனால் இயல்பாக ஏற்படும் சுமூகமான உறவு கூட,  பல நேரங்களில் கருத்து முரண்பாடுகளில் தள்ளி,  குடும்பத்தில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.  இத்தகைய சூழ்நிலையில்,  மாமியார் - மருமகள் உறவை இன்னும் உறுதியாக்க தனியார் உணவகம் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Tags :
Advertisement