கேரளாவில் 4 வயது மகளை ஆற்றில் வீசிய தாய் கைது!
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே திருவாணியூர் பகுதியை சேர்ந்தவர்கள் சுபாஷ்-சந்தியா தம்பதியினர். இவர்களது மகள் கல்யாணி (4). இந்த நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே சந்தியா சம்பவத்தன்று கணவர் வீட்டின் அருகே உள்ள அங்கன்வாடியில் இருந்து மகள் கல்யாணியை அழைத்து சென்று ஆற்றில் வீசி கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சந்தியா குற்றத்தை ஒப்புகொண்டதால் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து சிறுமியின் உடலை கைப்பற்றிஉடற்கூறு ஆய்வு செய்யப்பட்டதில் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்த பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணையில் சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன்பு வரை அவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததை தந்தை வழி உறவினர் ஒப்பு கொண்டுள்ளார்.
மேலும் அவரின் மொபைல் போனில் ஆபாச படம் இருந்தாக கூறப்படும் நிலையில் அவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இதற்கும் சந்தியாவிற்கு சம்பந்தம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.