For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மதுராந்தகம் அருகே துணி துவைக்க சென்ற தாய், மகன் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு!

08:19 PM Jan 14, 2024 IST | Web Editor
மதுராந்தகம் அருகே துணி துவைக்க சென்ற தாய்  மகன் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு
Advertisement

மதுராந்தகம் அருகே, கிணற்றுக்கு துணிதுவைக்க சென்ற தாய் மற்றும் மகன் கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிகழ்வு, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள நெல்வாய் பாளையம் கிராமத்தை
சேர்ந்தவர் விமல் ராணி(35). இவரது மகன் பிரவீன் (15). இருவரும் தங்கள் வயல்வெளி பகுதியில் உள்ள கிணற்றுக்கு துணி துவைக்க சென்றுள்ளனர். அப்போது,
கிணற்றுக்கு அருகே அமர்ந்திருந்த பிரவீன்குமார் எதிர்பாராத விதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.

உடனே மகனை காப்பாற்றுவதற்காக விமல் ராணியும் கிணற்றுக்குள் குதித்துள்ளார். இந்நிலையில், இருவரும் நீரில் மூழ்கி மாயமாகி உள்ளனர். வயலின் அருகே வேலை செய்து கொண்டிருந்தவர்கள் துணி துவைக்க சென்றவர்கள் நீண்ட நேரமாக காணவில்லை என சென்று பார்த்துள்ளனர். அப்போது, புடவை மட்டும் மேலே இருந்து இருவரும் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே போலீசார் மற்றும் மீட்பு
படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதற்குள் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் நீரில் மூழ்கி இருவரையும் மீட்க முயற்சி செய்தனர். ஆனால், மழை காரணமாக கிணறு முழு கொள்ளளவு எட்டியுள்ளதால் நீண்ட நேரம் மூச்சு பிடிக்க முடியாமல் மேலே ஏறினர். அதற்குள் சம்பவ இடத்திற்கு வந்த,மீட்பு படையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீரில் மூழ்கி உயிரிழக்கும் விபத்துகள் அதிகரித்து கொண்டுதான் உள்ளன. இந்த வகையான விபத்துகளை தவிர்ப்பது நமது கைகளில்தான் உள்ளது. நீச்சல் தெரியாதவர்கள் யாரும் குளங்கள், ஏரிகள், குட்டைகள், கிணறுகள் போன்ற நீர்நிலைகளுக்கு செல்வதை தவிருங்கள். குழந்தைகளை கவனக்குறைவாக நீர்நிலைகள் அருகில் விடுவதை தவிர்க்கவும். எந்த ஒரு இயற்கை நீர்வளத்தை அனுகுவதற்கு முன்பும், அதனுடைய ஆழம், நீரின் தன்மை போன்றவற்றை அறியாமல் அவற்றில் இறங்க கூடாது.

இதுபோன்ற பாதுகாப்பான விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். மக்கள் அனைவரும் நீச்சல் தெரியாமல் நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

Tags :
Advertisement