For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அதிக முறை ரத்து செய்யப்பட்ட விமானங்கள் - காரணம் என்ன?

12:17 PM Jan 18, 2024 IST | Web Editor
அதிக முறை ரத்து செய்யப்பட்ட விமானங்கள்   காரணம் என்ன
Advertisement

பொதுவாக ஒரு மார்க்கத்தில் இயங்கும் விமானம் ரத்து செய்யப்படுகிறது என்றால் அதற்கு மோசமான வானிலை,  பெரும் மழைப்பொழிவு அல்லது அடர் பனிப்பொழிவு என்று பல காரணங்கள் இருக்கலாம்.

Advertisement

ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாதங்களில்,  அலையன்ஸ் ஏர் ஒவ்வொரு மாதமும் 1.74 சதவீத விமானங்களை ரத்து செய்துள்ளது.  அதே நேரத்தில் ஸ்பைஸ்ஜெட் 0.86 சதவீத விமானங்களை ஒவ்வொரு மாதமும் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 6 மாதங்களில் ஸ்பைஸ்ஜெட் சுமார் 700 விமானங்களையும் அலையன்ஸ் ஏர்சு280 விமானங்களையும் ரத்து செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அலையன்ஸ் ஏரைப் பொறுத்தவரை,  முன்னரே கூறியது போல்,  மோசமான வானிலை, இயக்கம் வழித்தடங்களில் எண்ணிக்கை குறைவு,  வசதிக்குறைவு காரணமாக ரத்து செய்யப்படுகின்றன என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.  ஸ்பைஸ்ஜெட்டைப் பொறுத்தவரை,  இயற்கை சார்ந்த பல காரணங்களோடு,  தொழில் நுட்பக் கோளாறு, தரையைப் பராமரிக்கும் பணியாளர்கள் கிடைப்பது உள்ளிட்ட பல பிரச்சனைகள் காரணமாக ரத்து செய்யப்படுவதாக விமான ஆய்வாளர் கூறியுள்ளார்.

பயணிகள் அதிகம் கோடைக்காலத்தில் தான் பயணிக்கின்றனர்.  ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 2020 கோடையுடன் ஒப்பிடும்போது 2023 கோடையில் 0.4 சதவீதம் குறைந்த விமானங்களை இயக்கியுள்ளது.

கடந்த மாதம், டிஜிசிஏ தனது பட்ஜெட் விமானங்களில் 50 சதவீத விமானங்களை எட்டு விமானங்களுக்கு மட்டுமே இயக்க உத்தரவிட்ட நிலையில் கடந்த ஆறு மாதங்களில்,  இண்டிகோ தனது விமானங்களில் 0.65 சதவீதத்தை ரத்து செய்துள்ளது. GoFirst 0.05 சதவீத விமானங்களை மட்டுமே ரத்து செய்துள்ளது.  அதே நேரத்தில்
ஏர் இந்தியா இரண்டாவது மிகக் குறைவான விமானங்களை ரத்து செய்துள்ளது.  அதனைத் தொடர்ந்து தொடர்ந்து ஏர் ஏசியா விமானங்களை ரத்து செய்வதில் 3 வது இடத்தில் உள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் 2019ல் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 4 சதவீத விமானங்கள் ரத்து செய்யப்படுவதிலிருந்து,  விமான நிறுவனம் எண்ணிக்கையை 0.4 சதவீதமாகக் குறைத்துள்ளது.  இந்த நிறுவனத்தின் செயல்திறனில் முன்னேற்றம் ஏற்பட்டது, விமானத்தின் புதிய உரிமையாளர்கள் மற்றும் சிறந்த திறன் வரிசைப்படுத்துதலே போன்ற பல காரணங்களை சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Tags :
Advertisement