For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மியான்மரில் 9,000-க்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை!

12:27 PM Jan 04, 2024 IST | Web Editor
மியான்மரில் 9 000 க்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை
Advertisement

மியான்மரில்,  நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 9,700க்கும் மேற்பட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டனர். 

Advertisement

மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயுத குழுக்கள் போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய எல்லையில் உள்ள மியான்மர் பகுதிகளை இந்த ஆயுதக் குழுக்கள் கைப்பற்றி வருகின்றனர். இதனையடுத்து மியான்மர் ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள் நுழைந்து இந்திய பாதுகாப்பு படையினரிடம் தஞ்சம் அடைவது தொடருகிறது.

இந்நிலையில், மியான்மர்  சுதந்திர தினமானத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 9,700க்கும் மேற்பட்ட கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று ராணுவ கவுன்சில் அறிவித்துள்ளது. பல்வேறு சிறைகள் மற்றும் தடுப்பு மையங்களில் உள்ள 9,652 கைதிகள் மன்னிக்கப்படுவார்கள் என்றும் 114 வெளிநாட்டு கைதிகள் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பரோல் செய்யப்பட்ட கைதிகள், "இன்னொரு குற்றம் செய்தால், அந்த தண்டனையுடன் சேர்த்து மீதமுள்ள தண்டனையை தொடர்ந்து அனுபவிப்பார்கள்" என்ற உறுதிமொழியின் பேரில் விடுவிக்கப்பட்டனர். அரசியல் கைதிகள் யாரேனும் விடுதலை செய்யப்படுவார்களா என்பது இன்னும் தெரியவில்லை.  ஏற்கனவே இராணுவம் கையகப்படுத்தப்பட்டதிலிருந்து 25,000 க்கும் மேற்பட்ட கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட 5,800 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement