For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பொள்ளாச்சியில் ரூ.2 கோடி ஆடுகள் விற்பனை- வியாபாரிகள் மகிழ்ச்சி!

03:34 PM Nov 09, 2023 IST | Web Editor
பொள்ளாச்சியில் ரூ 2 கோடி ஆடுகள் விற்பனை  வியாபாரிகள் மகிழ்ச்சி
Advertisement

தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சி  ஆட்டுச் சந்தையில்  2 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதால் வியாபாரிகள்  மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில்,  வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.  இந்த ஆட்டுச்சந்தையில் பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி திருப்பூர்,  ஈரோடு,  திண்டுக்கல் உள்ளிட்ட வெளிமாவட்டங்களை சேர்ந்த 100- க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம்.

கடந்த மாதம் புரட்டாசி மாதம் என்பதால் ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்து வந்தது.
தற்போது புரட்டாசி மாதம் நிறைவு பெற்றதுடன்,  இன்னும் இரண்டு நாட்களில் தீபாவளி பண்டிகை என்பதால், ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

வெள்ளாடு,  செம்மறி ஆடு,  கிடா போன்ற ரக ஆடுகள் அதிகம் விற்பனைக்கு வந்திருந்தன.
வழக்கமாக 400ல்  இருந்து 600 ஆடுகள் வரை வருவது வழக்கம்.  ஆனால் தீபாவளி பண்டிகை ஒட்டி இன்று சுமார் 1300-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.8000 முதல் ரூ.9000 ரூபாய் வரை விற்பனையானது.  தீபாவளி பண்டிகையை ஒட்டி பொள்ளாச்சி ஆட்டுச் சந்தையில் சுமார் ரூ.2 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :
Advertisement