மீனவர்கள் கைது - காரைக்காலில் 1000க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகன கண்டன பேரணி!
இலங்கை கடற்படையால் 13 மீனவர்கள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டதை கண்டித்து, காரைக்காலில் 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் இருசக்கர வாகன கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.
01:49 PM Feb 16, 2025 IST | Web Editor
Advertisement
காரைக்கால் மீனவர்கள் மீது அத்துமீறி இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தை கண்டித்தும் துப்பாக்கி சூட்டில் காயம்பட்டு இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூன்று மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் இன்று ஆறாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
இந்த நிலையில் தங்களது கோரிக்கைகளுக்கு இதுவரை மத்திய மற்றும் புதுச்சேரி மாநில அரசு நடவடிக்கை எடுக்காததால் இன்று காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மாவட்ட முழுவதும் இருசக்கர வாகன கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.
1000க்கும் மேற்பட்ட மீனவர்களின் இருசக்கர வாகன பேரணியால் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.