For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பள்ளி மீது மரக் கிளை விழுந்து 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்!

03:43 PM Dec 14, 2023 IST | Web Editor
பள்ளி மீது மரக் கிளை விழுந்து 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்
Advertisement

பள்ளியின் மீது மரத்தின் பெரிய கிளை விழுந்ததில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.

Advertisement

திருவள்ளூரை அடுத்த சிறுவனூர் கண்டிகை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய
தொடக்கப் பள்ளியில் 50 மாணவர்கள் படித்து வருகின்றனர்.  இந்த நிலையில்
வழக்கம் போல்  பள்ளிக்கு வந்த சிறுவர்கள் பள்ளியின் பழைய கட்டிடத்தில்
உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

இதையும் படியுங்கள்: மாற்றங்களுடன் நகரும் தேமுதிக…கடந்து வந்த பாதை…!

இந்த நிலையில் எதிர்பாராத விதமாக, பள்ளியின் அருகே இருந்த நூறாண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த அரச மரம் பள்ளியின் மீது விழுந்தது.   இதில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவ, மாணவிகளில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் பள்ளியின் மீது விழுந்த கிளையை வெட்டி அகற்றினர்.  மரத்தில் உள்ள மற்ற கிளைகளையும் வெட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

Tags :
Advertisement