மழைக்கால கூட்டத்தொடர் - ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் என அறிவிப்பு!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்.
08:00 AM Jul 03, 2025 IST | Web Editor
Advertisement
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21ம் தேதி முதல் ஆகஸ்டு 21ம் தேதி வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Advertisement
அந்த பதிவில், "2025 ஆம் ஆண்டு ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கான அரசின் முன்மொழிவை இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அங்கீகரித்துள்ளார். சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய 2 நாட்களில் நாடாளுமன்றத்தில் எந்த அமர்வும் இருக்காது" என பதிவிட்டுள்ளார்.