For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

’குரங்கு பெடல்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

06:33 PM Apr 29, 2024 IST | Web Editor
’குரங்கு பெடல்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது
Advertisement

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள குரங்கு பெடல் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியான  ‘அயலான்’ திரைப்படம் வெளியாகி ரூ.90 கோடிக்கும் மேல் வசூல் செய்து வெற்றிப் படமாக அமைந்தது.

இதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனின் நடிப்பில் அவரது 21வது படம் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. ‘அமரன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இப்படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான, சிவகார்த்திகேயன் புராடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள குரங்கு பெடல் என்ற திரைப்படம் மே மாதம் 3 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தை இயக்குநர் கமல்கண்ணன் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் குரங்கு பெடல் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த ட்ரெய்லரில் சிறுவன் ஒருவன் சைக்கிள் ஓட்டுவதற்கு ஆசைப்படுகிறான். அதற்காக அவன் செய்யும் செயல்கள், சவால்கள் ஆகியவற்றை மையமாக வைத்து கிராமப் பின்புலத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இப்படத்தில் காளி வெங்கட் அந்த சிறுவனின் அப்பாவாக நடிக்கிறார். யூடியூப் பிரபலங்களாக அறியப்பட்டு வெள்ளித்திரையில் நடித்து வரும் பிரசன்னா பாலச்சந்திரன் , ஜென்சன் திவாகர் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். ட்ரெய்லரி  டைடில் கார்டில் இடம்பெற்றுள்ள ”விளையாட்டு வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு நல்லது” என்கிற வசனம் கவனத்தை ஈர்க்கிறது.

Tags :
Advertisement