Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாளை வெளியாகவுள்ள குரங்கு பெடல் திரைப்படம் | போஸ்டரை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன்!...

09:55 PM May 02, 2024 IST | Web Editor
Advertisement

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள `குரங்கு பெடல்'
திரைப்படம் நாளை வெளியாகவுள்ள அத்திரைப்படத்தின் போஸ்டரை சிவகார்த்திகேயன் தனது X தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Advertisement

'மதுபானக்கடை', 'வட்டம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய கமலக்கண்ணன் இயக்கத்தில், காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'குரங்கு பெடல்'. இது ராசி அழகப்பன் எழுதிய 'சைக்கிள்' என்ற சிறுகதையைத் தழுவி படமாக உருவாகியுள்ளது. இதில் சந்தோஷ் வேல்முருகன், வி.ஆர்.ராகவன், எம்.ஞானசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார். நாளை இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர்.

காளி வெங்கட் பேசுகையில், "இந்தப் படம் எனக்கு மிக முக்கியமானது. என் வாழ்க்கையின் பல முக்கிய தருணங்களை இந்தப் படம் நினைவுப்படுத்தி இருக்கிறது. 'குரங்கு பாடல்' கோவா பிலிம் பெஸ்டிவல் ஒன்றில் திரையிடப்பட்டு பாராட்டுப் பெற்றது. எங்க அப்பா எனக்கு சைக்கிள் ரெடி பண்ணி கொடுத்த ஞாபகங்கள் எல்லாம் எனக்கு இந்தப் படத்தில் நடிக்கும்போது வந்தது. உங்களுக்கும் பிடிக்கும்" என்றார்.

 

 

Tags :
Kurangu PedalKurangu Pedal From May 3Kurangu Pedal From TomorrowSiva Kartikeyantamil cinema
Advertisement
Next Article