Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பண மோசடி வழக்கு: சவுக்கு சங்கருக்கு கரூர் நீதிமன்றம் ஜாமீன்!

12:44 PM Jul 24, 2024 IST | Web Editor
Advertisement

பண மோசடி வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி கரூர்
குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

கரூர், காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் அப்பகுதியில்
பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவருக்கு சவுக்கு யூடிபில் பணிபுரிந்த
விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தங்கள் யூடியூபில்
விளம்பரம் செய்தால் உங்கள் நிறுவனம் மிகப் பெரிய அளவில் வளரும் என ஆசைவார்த்தை கூறியதால், கிருஷ்ணன் தனது மனைவியிடமிருந்து சுமார் 7 லட்சம் ரூபாய் பெற்று விக்னேஷ்வரனிடம் கொடுத்துள்ளார்.

ஆனால், விக்னேஷ் சொன்னபடி நடந்து கொள்ளாததால், விக்னேஷை தொடர்பு கொண்ட
கிருஷ்ணன் தனது பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அப்போது அவர் பணம் தர முடியாது என கூறி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, விக்னேஷ் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் கிருஷ்ணன் புகார் அளித்தார்.

அதன்படி, விக்னேஷை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி, அந்த யூடியூப் நிறுவனத்தின் உரிமையாளர் சவுக்கு சங்கரை புழல் சிறையில் இருந்து அழைத்து வந்து கடந்த 9ஆம் தேதி கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த
நீதிமன்றத்தில் குற்றவியல் நீதிபதி பரத்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதையும் படியுங்கள் : நேபாளத்தில் 19 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் விழுந்து விபத்து! போலீசார் தீவிர விசாரணை!

அப்போது காவல்துறையினரின் கோரிக்கையை பரிசீலித்த நீதிபதி 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார். இந்நிலையில், விசாரணை முடிந்து இரண்டாவது முறையாக சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கரூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. சவுக்கு சங்கர் தரப்பில் இந்த வழக்கில் ஏற்கனவே ஜாமீன் கோரப்பட்ட நிலையில், இன்று அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Tags :
BailKarur Criminal Courtmoney fraud casesavukkushankaryoutuber
Advertisement
Next Article