For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் - ஷோபனா.. எந்த படம் தெரியுமா?

04:57 PM Apr 19, 2024 IST | Web Editor
56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால்   ஷோபனா   எந்த படம் தெரியுமா
Advertisement

நடிகை ஷோபனா, மோகன்லாலின் 360-வது படத்தில் இணைந்துள்ளதாக வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

Advertisement

மலையாள சினிமாவில் பிரபலமானவர் நடிகர் மோகன் லால். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேரு திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது.  இதனைத் தொடர்ந்து, வெளியான 'மலைக்கோட்டை வாலிபன்' திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்நிலையில், நடிகர் மோகன்லாலின் 360வது படத்தை இயக்குனர் தருண் மூர்த்தி இயக்குகிறார். இவர் 'ஆப்பரேஷன் ஜாவா', 'சவுதி வெள்ளக்கா' படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர். இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக எல்360 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ரஞ்சித் தயாரிக்கிறார்.

இந்நிலையில், நடிகை ஷோபனா இப்படத்தில் இணைந்துள்ளதாக வீடியோ ஒன்றை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “நான் பல ஆண்டுகளுக்குப் பிறகு மலையாளப் படம் ஒன்றில் நடிக்கிறேன். இதை தருண் மூர்த்தி இயக்குகிறார்.

ஆமாம் நீங்கள் எதிர்பார்ப்பதுதான். மோகன்லாலின் 360வது படத்தில் நடிக்கிறேன். மோகன்லாலுக்கு வாழ்த்துகள். இது நாங்கள் ஒன்றாக இணைந்து நடிக்கும் 56வது படம். அதனால் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். உங்களுக்கும் படம் பிடிக்குமென நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

Tags :
Advertisement