For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தேஜஸ் போர் விமானத்தின் முதல் பெண் விமானி #MohanaSingh

10:06 AM Sep 18, 2024 IST | Web Editor
தேஜஸ் போர் விமானத்தின் முதல் பெண் விமானி  mohanasingh
Advertisement

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தை இயக்கி முதல் பெண் விமானி மோகனா சிங் ஆவார்.

Advertisement

இந்திய விமானப்படை உலகின் 4-வது சக்தி வாய்ந்த விமானப்படையாகும். தற்போது 20 பெண் போர் விமானிகள் உள்ளனர். 2016 ஆம் ஆண்டில், விமானப்படை பெண்களுக்காக போர் ஓட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், இந்திய விமானப்படையின் ஸ்குவாட்ரான் தலைவரான மோகனா சிங், LCA தேஜஸ் விமானத்தை ஓட்டிய முதல் பெண் போர் விமானி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவர் ஜோத்பூரில் சமீபத்தில் நடந்த 'தரங் சக்தி' பயிற்சியின் ஒரு பகுதியாக இருந்தார். மேலும், முப்படைகளின் மூன்று துணைத் தலைவர்களுடன் பணியாற்றியுள்ளார்.

இதையும் படியுங்கள் : விநாயகர் கோயிலில் சமண தீர்த்தங்கரர் சிற்பம் வழிபாடு – #Tirukovilur-ல் ஆய்வில் தகவல்!

மோகனா சிங்கின் இந்த சாதனை, இந்திய விமானப் படையில் பெண்களுக்கு புதிய கதவுகளைத் திறந்துள்ளது. அதன்படி, விமானப்படையின் அனைத்து துறைகளிலும் பெண்கள் முக்கியத்துவம் கொடுத்து வாய்ப்பை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 2ம் தேதி, விமானப்படை 153 அக்னிவீர் வாயு (பெண்கள்) அதிகாரி சேர்க்கப்பட்டனர்.

Tags :
Advertisement