‘த்ரிஷ்யம் 3’ படத்தை உறுதி செய்த மோகன்லால்!
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மோகன்லால். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடித்த படம் தான் த்ரிஷ்யம். இதில் மோகன்லால் உடன் மீனா, எஸ்தர் அனில், ரோஷன் பஷீர், அன்சியா ஹசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
அதனைதொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதனை தமிழில் கமல்ஹாசனை வைத்து பாபநாசம் என்ற பெயரில் ஜீத்து ஜோசப் இயக்கினார். இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.
அதனைத்தொடர்ந்து, 2021ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் த்ரிஷ்யம் 2ம் பாகம் வெளியானது. இப்படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக மோகன்லால், மீனா, அன்சியா ஹசன் நடித்திருந்தனர். அனில் ஜான்சன் இசையமைத்த இப்படத்தை ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்திருந்தார். இப்படமும் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.
த்ரிஷ்யம் முதல் மற்றும் இரண்டாம் பாகம் வெளியாகி இரண்டுமே சூப்பர் ஹிட் அடித்த நிலையில், ரசிகர்கள் 3ம் பாகத்திற்க்காக காத்திருந்தனர். தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு நனவாகியுள்ளது . ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் த்ரிஷ்யம் 3 உருவாகவுள்ளது. இதனை மோகன்லால் தனது எக்ஸ் தளப் பதிவின் மூலம் உறுதி செய்துள்ளார்.
The Past Never Stays Silent
Drishyam 3 Confirmed!#Drishyam3 pic.twitter.com/xZ8R7N82un
— Mohanlal (@Mohanlal) February 20, 2025