For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

முகமது ஷமி – சானியா மிர்சா திருமணமா?

10:20 AM Jun 22, 2024 IST | Web Editor
முகமது ஷமி – சானியா மிர்சா திருமணமா
Advertisement

சானியா மிர்சா இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை திருமணம் செய்ய உள்ளதாக அண்மையில் தகவல் பரவிய நிலையில்,  சானியா மிர்சாவின் தந்தை இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

Advertisement

நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா,  கடந்த 2010ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை கரம் பிடித்தார்.  இந்தியரான இவர், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ததற்கு அப்போது ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  மேலும், சானியா மிர்சாவின் நாட்டுப்பற்றும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.  இதனால், சானியா – சோயப்பின் திருமணம் அந்த சமயத்தில் பேசுபொருளானது.

திருமணத்திற்கு பிறகு துபாயில் குடியேறிய சானியா மிர்சா,  இந்தியா சார்பில் தொடர்ந்து டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வந்தார்.  இந்த ஆண்டு தொடக்கத்தில் சானியா மிர்சா சோயிப் மாலிக்கை பிரிந்தார்.  இதனிடையே மாலிக் பாகிஸ்தானை சேர்ந்த நடிகை ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.  அது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சானியா மிர்சா இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை திருமணம் செய்ய உள்ளதாக அண்மையில் தகவல் பரவியது.  இந்த நிலையில் சானியா மிர்சாவின் தந்தை இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.  இது குறித்து அவர் கூறும்போது “இது முற்றிலும் வதந்தி.  சானியா இதுவரை ஒரு முறை கூட முகமது ஷமியைப் பார்த்ததில்லை” எனக் கூறி வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

Tags :
Advertisement