For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கார் விபத்தில் சிக்கியவருக்கு உதவிய முகமது ஷமி..!

08:28 PM Nov 26, 2023 IST | Web Editor
கார் விபத்தில் சிக்கியவருக்கு உதவிய முகமது ஷமி
Advertisement

உத்தரகாண்டில் மாநிலத்தில் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி தனது கார் முன்பாக சென்ற கார் விபத்தில் சிக்கியதை அடுத்து  மீட்க உதவியுள்ளார்.

Advertisement

உத்தரகாண்ட் மாநிலம், நைனிடால் அருகே மலைப்பாதையில் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி காரில் சென்று கொண்டிருந்தார்.  அப்போது அவர் சென்று கொண்டிருந்த  காருக்கு முன்னே சென்ற கார் ஒன்று திடீரென சாலையோரம் இருந்த பள்ளத்தில் தீடிரென கவிழ்ந்தது.

உத்திரகாண்ட் மாநிலம் நைனிடாலில் உள்ள தனது அண்ணன் மகளின் பள்ளிக்கு முகமது ஷமி சென்றுள்ளார். அங்கு 2மணி நேரம் அவர்களோடு செலவழித்துவிட்டு வரும் வழியில் இந்த விபத்து நடந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து காரில் பயணித்தவரை உடனடியாக முகமது ஷமி மற்றும் அருகில் இருந்த சிலரும் பாதுகாப்பாக வெளியே கொண்டுவந்து மீட்க உதவியுள்ளனர். மேலும் இதுதொடர்பான வீடியோவை முகமது ஷமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் முகமது ஷமி குறிப்பிட்டுள்ளதாவது..

"விபத்தில் சிக்கிய நபரை காப்பாற்றியதில் மகிழ்ச்சி. அந்த நபர் மிகவும் அதிர்ஷ்டசாலி. கடவுள் அவருக்கு இரண்டாவது பிறப்பை கொடுத்துள்ளார் “ என ஷமி குறிப்பிட்டுள்ளார்.  ஷமி பதிவிட்டுள்ள விடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement