Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"மோடியின் உத்தரவாதம்" | பாஜக தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள்!...

10:24 AM Apr 14, 2024 IST | Web Editor
Advertisement

மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று காலை 9.30 மணிக்கு டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். 

Advertisement

நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை நடக்க உள்ளது. பின்னர், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடக்க உள்ளது. இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட தேசிய கட்சிகள் நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், நாடும் முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று (ஏப். 14) டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை “சங்கல்ப் பத்ரா” என்ற பெயரில் பிரதமர் மோடி வெளியிட்டார். இவ்விழாவில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் உடனிருந்தனர்.

முன்னதாக, கட்சித் தலைமையகத்தில் டாக்டர்.அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது உருவ படத்திற்கு பிரதமர் மோடி, அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

சிறப்பு அம்சங்கள்: 

  1. நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்,
  2. ’ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை’ அமல்படுத்தப்படும்,
  3. 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு ரூ. 5 லட்சம் மருத்துவக் காப்பீடு,
  4. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேசன் பொருள்கள் வழங்கப்படும்,
  5. சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் உஜ்வாலா திட்டம் நீட்டிக்கப்படும்,
  6. பொது வாக்காளர் பட்டியல் முறை அமல்படுத்தப்படும்,
  7. 2025-ஆம் ஆண்டு ’பழங்குடியினரின் பெருமை ஆண்டாகக்’ கடைபிடிக்கப்படும்,
  8. பெண்கள், விவசாயிகள், ஏழைகள், இளைஞர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்படும்,
  9. வேலைவாய்ப்பு, முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்,
  10. அடுத்த 5 ஆண்டுகளில் கிராமங்களில் குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பிடித்துள்ளன.
Tags :
BJPBJP ManifestoElection2024Lok SabaPM Modi
Advertisement
Next Article