Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜூன் 9-ல் 3-வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி!

03:36 PM Jun 06, 2024 IST | Web Editor
Advertisement

வரும் ஜூன் 9ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளார்.  குடியரசுத் தலைவர் மாளிகையில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 

Advertisement

நாடு முழுவதும் 18வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில்,  கடந்த ஜூன் 4ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.  இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது.  மற்றவை 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.  இதில் பாஜக 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

இந்த தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும்,  சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது.

இதுதொடர்பாக மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினர்.  இந்நிலையில் பல ஆலோசனைகளுக்கு அடுத்து வரும் ஜூன் 9ஆம் தேதி மாலை 6 மணிக்கு மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளார்.  இப்போதைக்கு பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே பதவியேற்க உள்ளார்.  மற்ற அமைச்சர்கள் பதவியேற்பு பின்னர் நடைபெறும் என தகவல்
வெளியாகியுள்ளது.  பதவியேற்பு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் குடியரசு தலைவர் மாளிகையில் வேகமாக நடைபெற்று வருகின்றன.

Tags :
Election2024IndiaNarendra modindaParlimentary Electionprime minister
Advertisement
Next Article