Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தூத்துக்குடியில் ஜூலை 26-ல் நடைபெறும் விழாவில் ரூ.4,500 கோடி திட்டப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மோடி!

தூத்துக்குடியில் ஜூலை 26 ல் நடைபெறும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி 1,030 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ரயில் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
08:24 AM Jul 25, 2025 IST | Web Editor
தூத்துக்குடியில் ஜூலை 26 ல் நடைபெறும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி 1,030 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ரயில் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
Advertisement

பிரதமா் நரேந்திர மோடி வரும் சனி, ஞாயிறு (ஜூலை 26, 27) ஆகிய இரு நாள்கள் அரசு முறைப் பயணமாக தமிழகம் வருகிறாா். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற 1,030 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ரயில் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்

Advertisement

 

பிரதமர் மோடி, 99 கோடி ரூபாய் செலவில் 90 கிலோ மீட்டர் தொலைவிலான மதுரை - போடிநாயக்கனூர் பாதையின் மின்மயமாக்கல் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிக்கும் மற்றும் சுற்றுலாவை ஆதரிக்கும் அதே வேளையில், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் வழக்கமான பயணிகள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு பயனளிக்கும். மேலும், வேகத்தை அதிகரிக்கும் மற்றும் பயணிகளின் பயண நேரத்தைக் குறைக்கும் பிரிவில் கூடுதல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும், திருவனந்தபுரம் - கன்னியாகுமரி திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் 21 கி.மீ. நாகர்கோவில் டவுன் - கன்னியாகுமரி பிரிவின் இரட்டை வழிப் பாதையை 650 கோடி ரூபாய் மதிப்பில் பிரதமர் அர்ப்பணிக்கிறார். இது தமிழ்நாட்டின் தெற்குப் பகுதிகளில் இணைப்பை வலுப்படுத்தும். இந்தத் திட்டம் கூடுதல் பயணிகள் மற்றும் சரக்கு சேவைகளை இயக்குவதற்கு வழி வகுத்துள்ளது மற்றும் மேம்பட்ட செயல்பாட்டுத் திறனுக்கு பங்களித்துள்ளது.

மேலும், ரூ.283 கோடி செலவில் ஆரல்வாய்மொழி - நாகர்கோவில் சந்திப்பு (12.87 கி.மீ) மற்றும் திருநெல்வேலி - மேலப்பாளையம் (3.6 கி.மீ) பிரிவுகளை இரட்டிப்பாக்கும் இருவழி ரயில்பாதைத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.  இது, சென்னை - கன்னியாகுமரி போன்ற முக்கிய தெற்கு வழித்தடங்களில் பயண நேரத்தைக் குறைக்க உதவுகிறது.

Tags :
govermenetschemeslatestNewsPMModiTNnewsTutucorin
Advertisement
Next Article