Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது” - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பேட்டி!

01:44 PM Mar 24, 2024 IST | Web Editor
Advertisement

“மோடி பிரதமராக மீண்டும் வரக்கூடாது,  அவரை தோற்கடிக்க வேண்டும்” என மதுரையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

பாஜக  நிர்வாகி சசிக்குமார் இல்ல திருமண நிகழ்ச்சி மதுரை தெப்பக்குளம்
பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்தியமைச்சருமான சுப்ரமணிய சுவாமி மற்றும் அவரது மனிவி சந்திரலேகா ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணிய சுவாமி தெரிவித்ததாவது..

"பாஜக வேட்பாளர்களில் நயினார் நாகேந்திரன் கட்டாயம் வெற்றி பெறுவார். அண்ணாமலை வெற்றி பெறுவதை பற்றி தெரியாது. கனவு எல்லோருக்கும் இருக்கிறது. அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வேட்பாளர்களை எல்லா
இடத்திலும் நிறுத்தலாம். அமைப்பு வலுவாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.
பணத்தை கொடுத்து விளம்பரம் செய்தால் மட்டும் போதாது.

மக்கள் நம்ப வேண்டும். பிரதமர் மோடி சீனா, இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்ததை தடுக்கவில்லை. பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ளோம். மாலத்தீவுடன் பிரச்சனை உள்ளது. என்ன செய்தார் மோடி. ஒன்றும் செய்யவில்லை. நான் எல்லாவற்றையும் பையில் வைத்துக்கொண்டு சென்றுவிடுவேன் என மோடி நினைப்பதால் என்னை தூரமாக வைத்துள்ளார். பாஜக அழைத்தால் தேர்தல்  பிரச்சாரத்திற்கு செல்வேன்.

திமுக கட்

மோடி பிரதமராக மீண்டும் வரக்கூடாது. தோற்கடிக்க வேண்டும்”  எனக் கூறியுள்ளார்.

Tags :
BJPElection2024Narendra modiParlimentary Electionsubramanian swamy
Advertisement
Next Article