For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாளை மோடி பதவியேற்பு விழா:  டெல்லியில் ஜூன் 10 வரை ட்ரோன்கள் பறக்க தடை!

03:29 PM Jun 08, 2024 IST | Web Editor
நாளை மோடி பதவியேற்பு விழா   டெல்லியில் ஜூன் 10 வரை ட்ரோன்கள் பறக்க தடை
Advertisement

நரேந்திர மோடி நாளை பிரதமராக பதவியேற்கவுள்ள நிலையில்,  டெல்லியில் ஜூன் 10-ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது.  543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும்,  இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றன.  இதனையடுத்து நாளை பிரதமராக மோடி பதவியேற்கவுள்ளார்.

மத்தியில் மோடி 3.0 அரசு அமைய அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.  கடந்த முறை தனிப் பெரும்பான்மை பெற்ற பாஜக,  இம்முறை பெறவில்லை.  எனவே கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது.  இது மோடிக்கு புதிய அனுபவமாக இருக்கும் என கூறப்படுகிறது.

பதவியேற்பு நிகழ்விற்கு வெளிநாட்டு தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  விருந்தினர்கள் தங்குவதற்கு நட்சத்திர ஓட்டல்கள் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.  பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் போடப்பட்டுள்ளன. ஜனாதிபதி திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை இரவு 7:15 மணிக்கு,  ராஷ்டிரபதி பவனில் மோடி மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும்,  ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.  நரேந்திர மோடி நாளை பிரதமராக பதவியேற்கவுள்ள நிலையில்,  டெல்லியில் ஜூன் 10ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லி காவல்துறையினர் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

"ஜூன் 9 முதல்,  பாரா-கிளைடர்கள்,  பாரா மோட்டார்கள்,  ஹேங் கிளைடர்கள்,  ஆளில்லா விமானங்கள்,  மைக்ரோலைட் விமானங்கள்,  ரிமோட் பைலட் விமானங்கள்,  ஹாட் ஏர் பலூன்கள்,  சிறிய அளவிலான விமானங்கள் போன்றவை வான்வழி தளங்களில் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது.  இந்த தடை உத்தரவு ஜூன் 10 வரை அமலில் இருக்கும்.  உத்தரவை மீறினால்,  இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188ன் கீழ் தண்டனை விதிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement