சென்னையில் மிதமான அளவில் காற்று மாசு - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்!
சென்னையில் தொடர்ந்து காற்று மாசு மிதமான அளவில் இருப்பதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பட்டாசு வெடித்ததாலும், போக்குக்குவரத்து உள்ளிட்ட காரணங்களாலும் சென்னையில் காற்றின் தர குறியீடு அனைத்து இடங்களிலும் காற்று தரக் குறியீடு 100 முதல் 200 வரை பதிவானது.
நேற்றைய நிலவரப்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சென்னையின் பல்வேறு பகுதிகளின் காற்றின் தரக்குறியீடை வெளியிட்டது. அதன்படி அதிகபட்சமாக அந்தோணி பிள்ளை நகரில் 190, பெருங்குடியில் – 167, ராயபுரத்தில் – 160, அரும்பாக்கம் – 157, முத்தமிழ் நகர் – 152, மணலி – 151, ஸ்டெல்லா மேரிஸ் பகுதி – 144, கொரட்டூர் – 142, ஆலந்தூர் – 124, வேளச்சேரி – 119.
இந்நிலையில் இன்றைய நிலவரப்படி காற்றின் மாசு குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி அதிகபட்சமாக அந்தோணி பிள்ளை நகரில் 155, பெருங்குடியில் – 119, ராயபுரத்தில் – 95, அரும்பாக்கம் – 134, முத்தமிழ் நகர் – 127, மணலி – 142, ஸ்டெல்லா மேரிஸ் பகுதி – 124, கொரட்டூர் – 122, ஆலந்தூர் – 89, வேளச்சேரி – 122.
தொடர்ந்து காற்றின் தரத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.