மொபைல் கேமராவில் படம் பிடிக்கப்பட்ட ஈ ! - இணையத்தில் வீடியோ வைரல்!
கோவையை சேர்ந்த மொபைல் போட்டோகிராபர் ஈ - யின் கண்கள் மற்றும் இறக்கைகளை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார். அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீட்டில் பெரும்பாலும் காணப்படும் ஈக்கள் தனது கால்கள், இறக்கைகள் மற்றும் பாதங்கள் மூலமாக, நோய்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரப்ப முடியும். அவை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், அவற்றால் உயிருடன் உள்ள பாக்டீரியாக்களைப் பரப்ப முடியும் எனத் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பொதுவாக ஈக்களை நாம் அனைத்து இடங்களிலும் பார்த்திருந்தாலும். ஆனால், மிக அருகில் பார்த்திருக்க மாட்டோம் . அப்படியே ஈக்களை மிக அருகில் பார்த்திருந்தாலும், அது கிராஃபிக்ஸில் பார்த்திருப்போம்.
இதனைத் தொடர்ந்து, கிராஃபிக்ஸில் நாம் பார்க்கும் ஈக்கள் சில நேரங்களில் துல்லியமாகவும் இருக்கலாம், சில நேரங்களில் அது மிகைபடுத்துதலுடனும் இருக்கலாம். இந்நிலையில், ஒரிஜினலாக ஈக்கள் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பதிலுரைக்கும் விதமாக, கோவையை சார்ந்த மொபைல் ஃபோட்டோகிராஃபர் பாலா என்ற நபர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்த காட்சியில் மொபைல் ஃபோட்டோகிராஃபர் ஈக்களின் கண்கள், இறக்கைகள், கால்கள் நகர்வுகளை துல்லியமாக படம் பிடித்துள்ளார். மேலும், இந்த வீடியோ பதிவு கிராஃபிக்சா அல்லது ஒரிஜினலா என்ற கேள்வி எழுப்பும் அளவுக்கு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த வீடியோ பதிவை அந்த நபர் தனது மொபைல் கேமராவில் எடுத்தது குறிப்பிடதக்கது.