Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நாளை ஆலோசனை! 

01:25 PM Mar 06, 2024 IST | Web Editor
Advertisement

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் ஆலோசனை கூட்டம்  நாளை நடைபெற உள்ளது. 

Advertisement

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.  தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.  அந்த வகையில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்மையில் நடத்தியது.

தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்தது.  அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,  மதிமுக,  கொமதேக ஆகிய கட்சிகள் பங்கேற்றன.  இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொமதேக கட்சிகளுக்கு ராமநாதபுரம் மற்றும் நாமக்கல் ஆகிய தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.  மேலும்,  மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள் : புதுச்சேரியில் சிறுமி வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது!

இந்நிலையில்,  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆலோசனை கூட்டம்  நாளை நடைபெற உள்ளது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள்,  மாநில செயலாளர்கள், அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.  திமுக கூட்டணியில் இணைவது பற்றி விவாதிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திமுக உடனான பேச்சுவார்த்தையில் மநீம இரண்டு தொகுதிகளை கேட்டிருந்த நிலையில், திமுக ஒரு தொகுதியை மட்டுமே கொடுக்க முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து,  மக்கள் நீதி மய்யம் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட கேட்டதாகவும் அதற்கு திமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டி வேண்டும் என வலிறுத்தியுள்ளதாக  கூறப்படுகிறது.  மேலும், தென் சென்னை மற்றும் கோவை தொகுதியை மநீம தரப்பில் திமுகவிடம் கேட்டிருந்த நிலையில்,  கோவை தொகுதியை ஒதுக்க திமுக முன்னவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
ChennaiDMKElection2024LokSabhaElection2024MNMSeatSharingTNagar
Advertisement
Next Article