For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ. பதவி? - சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

12:25 PM Mar 12, 2024 IST | Jeni
பொன்முடிக்கு மீண்டும் எம் எல் ஏ  பதவி    சபாநாயகர் அப்பாவு விளக்கம்
Advertisement

பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ. பதவி வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Advertisement

கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில்,  வருமானத்துக்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்டோர் மீது 2011-ம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், 2016-ல் பொன்முடி மற்றும் அவரது மனைவியை வழக்கிலிருந்து விடுவித்தது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது.  கடந்த டிசம்பர் 21-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம்,  பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும்,  தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து உடனடியாக பொன்முடி தனது அமைச்சர் பதவி மற்றும் எம்.எல்.ஏ., பதவிகளை இழந்தார்.  இருப்பினும் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய அவருக்கு 30 நாட்கள் அவகாசம் அளித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.இதையடுத்து உச்சநீதிமன்றத்தில்,  இந்த வழக்கு தொடர்பாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மேல்முறையீடு செய்திருந்தனர்.  மூன்றாண்டு சிறை தண்டனைக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.  இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  அப்போது பொன்முடியின் மேல்முறையீட்டு வழக்கில் அவரது சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்த திருக்கோவிலூர் தொகுதி சமீபத்தில் காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் உச்சநீதிமன்றம் பொன்முடி மீதான தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளதால், இ ந்த அறிவிப்பு திரும்பப்பெறப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.  இதையடுத்து, எம்.எல்.ஏ பதவியை மீட்டுத்தரக் கோரி சட்டப்பேரவை செயலகம் அல்லது கோர்ட்டை பொன்முடி நாடலாம் என்றும்,  ஊழல் தடுப்பு வழக்கில் இதுபோன்ற ஒரு நிலை முதல் முறை உருவாகியுள்ளதாகவும் சட்டப்பேரவை செயலகம் கூறியது.இந்நிலையில்,  பொன்முடிக்கு பதவி வழங்குவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.  திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு,  “பொன்முடி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அவருக்கான தண்டனையை நிறுத்தி வைத்துள்ளதால்,  வயநாடு எம்.பி. ராகுல் காந்தி எப்படி பதவியைப் பெற்றாரோ,  அதேபோல் பொன்முடிக்கு பதவியை மீண்டும் வழங்குவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அவருக்கு பதவி வழங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.

Tags :
Advertisement