Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு நிதியுதவி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

06:42 PM Nov 23, 2024 IST | Web Editor
Advertisement

திருச்செந்தூர் கோயிலில் யானை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :

"தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உள்ள தெய்வானை என்ற யானையின் பாகன் உதயகுமார் மற்றும் அவருடன் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் கடந்த 18ம் தேதி யானையின் அருகில் இருந்தபோது யானை திடீரென திமிறி அருகில் இருந்த பாகன் உதயகுமார் மற்றும் சிசுபாலன் ஆகிய இருவரையும் தூக்கி வீசித் தாக்கியுள்ளது.

இதில், சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் என்றும், பாகன் உதயகுமார் சிகிச்சை பலனின்றி மருத்துவனையில் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

இதையும் படியுங்கள் : வயநாடு தேர்தல் | “நாடாளுமன்றத்தில் மக்கள் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி பதிவு!

இச்சம்பவத்தில் உயிரிழந்த உதயகுமார் மற்றும் சிசுபாலன் ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
CMOTamilNaduElephantelephantattackMKStalinNews7Tamilnews7TamilUpdatestiruchendur
Advertisement
Next Article