Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மீனவர்கள் விவகாரம் | வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் #MKStalin மீண்டும் கடிதம்!

09:43 PM Sep 29, 2024 IST | Web Editor
Advertisement

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

அந்த கடித்தில் அவர் தெரிவித்துள்ளதாவது :

"ராமேஸ்வரம் மீன் பிடித்தளத்திலிருந்து IND-TN-10-MM-411 மற்றும் IND- TN-10-MM-544 பதிவு எண்களைக் கொண்ட இரண்டு படகுகளில் நேற்று( 28.09.2024 ) தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்து நிலையில், இன்று (29.09.2024) நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் கடலோர பகுதிகளில் வாழும் மீனவ சமுதாயத்தினரிடையே மிகுந்த துயரத்தையும், அவர்களது வாழ்வில் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள் : 7 நாள் தான் கேப்… அடுத்தடுத்து வெளியாகும் #FahadhFaasil – ன் 2 திரைப்படங்கள்!

இந்த சிக்கலான பிரச்னையை தூதரக ரீதியாக தீர்த்திட உறுதியான மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று, தான் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளதாகவும், நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் 27ம் தேதி பிரதமர் மோடியிடம் சமர்ப்பித்த கோரிக்கைகளில் ஒன்றாக இந்தக் கோரிக்கையையும் வலியுறுத்தியுள்ளேன்.

எனவே, நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் இலங்கை அரசிடமிருந்து உடனடியாக விடுவிக்கவும், வலுவான மற்றும் பயனுள்ள தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளகிறேன்” இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்தார்.

Tags :
CMOTamilNaduExternalAffairsMinisterJaishankarMKStalinNews7Tamilnews7TamilUpdatesTNGovt
Advertisement
Next Article