MIvsSRH | டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு தேர்வு!
2025 ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி இதுவரை 8 போட்டிகளில் பங்கேற்று 4-ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. அதே போல் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணி 7 போட்டிகளில் பங்கேற்று 2-ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது
இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று (ஏப்ரல்.23) தெலங்கானாவில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான டாஸை வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. மும்பை அணி சார்பில் ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹார்டிக் பாண்டியா, நமன் திர், மிட்செல் சாண்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா, விக்னேஷ் புதூர் ஆகியோர் விளையாட உள்ளனர்.
ஹைதராபாத் அணி சார்பில், டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, பேட் கம்மின்ஸ் , ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனத்கட், ஜீஷான் அன்சாரி, எஷான் மலிங்கா ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.