MIvsLSG | லக்னோவை வீழ்த்தி புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறிய மும்பை அணி!
இன்று(ஏப்.27) நடைபெற்ற ஐபிஎல் லீக் சுற்றில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்மை அணி ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ அணியை வான்கடே மைதானத்தில் எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸில் மும்மை அணி சார்பில் அதிகபட்சமாக ரியான் ரிக்கல்டன் 58 ரன்கள் அடித்தார். இவருக்கடுத்து சூர்யகுமார் யாதவ் 54 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் தங்கள் பங்கிற்கு ரன்களை அடித்தனர். இதன் மூலம் மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் குவித்தது. இதில் லக்னோ அணி சார்பில் மயங்க் யாதவ் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதையடுத்து 216 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய லக்னோ அணியில், மிட்செல் மார்ஷ், ஐடன் மார்க்கரம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் மார்க்கரம் 9 ரன்களில் பும்ராவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்பு வந்த நிக்கோலஸ் பூரன் 27 வில் ஜாக்ஸிடம் ஆட்டமிழந்தார். அவருக்கடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்த் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சொல்லும்படியாக ஆயுஷ் படோனி 34 ரன்களும், டேவிட் மில்லர் 24 ரன்களையும் அடித்தனர். மொத்தமாக 20 ஓவர்களில் ஆல் அவுட்டான லக்னோ அணி, 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வியை தழுவியது. இதன் மூலம் மும்பை அணி புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.