Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

MIvsKKR | தொடக்கத்தில் இருந்தே தடுமாறிய கொல்கத்தா அணி, மும்பைக்கு 117 ரன்கள் இலக்கு!

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் சுற்றில் ஆல் அவுட்டாகி 117 ரன்களை கொல்கத்தா அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.
09:23 PM Mar 31, 2025 IST | Web Editor
Advertisement

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று(மார்ச்.31) ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணிக்கும் அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணிக்கும் இடையேயான லீக் சுற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்று வறுகிறது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.மும்பை அணியில், ரியான் ரிக்கல்டன் , வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா(கேப்டன்), நமன் திர், மிட்செல் சாண்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், அஸ்வனி குமார், விக்னேஷ் புதூர் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

அதே போல் கொல்கத்தா அணியில், குயின்டன் டி காக்( விக்கெட் கீப்பர்), அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல்,  ரமணீப் சிங், ஸ்பென்சர் ஜான்சன்,  ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் விளையாடுகின்றனர்.

முதல் இன்னிஸில் கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 26 ரன்களை எடுத்திருந்தார். அவருக்கடுத்தபடியாக ரமணீப் சிங் 22 ரன்களை எடுத்திருந்தார், தொடக்கத்தில் இருந்தே தடுமாறிய கொல்கத்தா அணி, 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 116 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 117 என்ற இலக்கை மும்பை அணி சேஸிங் செய்யவுள்ளது.  மும்பை அணியில் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளையும், தீபக் சஹார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

Tags :
Ajinkya RahaneHardik PandyaKolkata Knight RidersMIvsKKRMumbai Indians
Advertisement
Next Article