MIvsGT | அரைசதம் விளாசிய சாய் சுதர்சன், மும்பை அணிக்கு 197 ரன்கள் இலக்கு!
18வது ஐபிஎல் தொடரின் 9வது போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் அணி மும்பை அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.
மும்பை அணியில் ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன்(விக்கெட் கீப்பர்) , சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சாண்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், முஜீப் உர் ரஹ்மான், சத்யநாராயண ராஜு ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
அதே போல் குஜராத் அணியில் சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் திவாத்தியா, ரஷீத் கான், சாய் கிஷோர், ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் விளையாடுகின்றனர்.
முதல் இன்னிங்ஸில் குஜராத் அணி சார்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 63 ரன்களும், சுப்மன் கில் 38 ரன்களும், ஜோஸ் பட்லர் 39 ரன்களும் அடித்திருந்தனர். மொத்தமாக 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த குஜராத், 196 ரன்கள் அடித்தது. மும்பை அணியில் ஹார்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், டிரென்ட் போல்ட், முஜீப் உர் ரஹ்மான், சத்யநாராயண ராஜு, தீபக் சாஹர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து 197 என்ற இலக்கை மும்பை அணி சேசிஸ் செய்து வருகிறது.