MIvsGT | குஜராத் அணி பேட்டிங், மும்பை அணி முதல் வெற்றியை பதிக்குமா?
18வது ஐபிஎல் தொடரின் 9வது போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் அணி மும்பை அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
மும்பை அணியில் ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன்(விக்கெட் கீப்பர்) , சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹார்டிக் பாண்டியா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சாண்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், முஜீப் உர் ரஹ்மான், சத்யநாராயண ராஜு ஆகியோர் விளையாட உள்ளனர்.
அதே போல் குஜராத் அணியில் சுப்மான் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் திவாத்தியா, ரஷீத் கான், சாய் கிஷோர், ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் விளையாட உள்ளனர்.
இரண்டு அணிகளும் நடப்பு தொடரில் தங்கள் முதல் போட்டியில் தோற்றுள்ளது. தொடர்ந்து இரு அணிகளில் முதல் வெற்றியை பதிக்கவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.