For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உலகக் கோப்பைத் தொடரில் புதிய சாதனை படைத்த மிட்செல் ஸ்டார்க்!

09:10 PM Jun 21, 2024 IST | Web Editor
உலகக் கோப்பைத் தொடரில் புதிய சாதனை படைத்த மிட்செல் ஸ்டார்க்
Advertisement

உலகக் கோப்பைத் தொடர்களில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார். 

Advertisement

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 1ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்ற 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட 12 அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.

சூப்பர் 8 சுற்றில் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேச அணிகளும் குரூப் 2ல் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். சூப்பர் 8 சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும்.

அதன்படி, சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலிய அணி வங்கதேச அணியை எதிர்த்து ஆடியது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 4 ஓவர்கள்  வீசி வெறும் 21 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.  மேலும் ஒரு விக்கெட்டையும் அவர் கைப்பற்றினார்.

இந்த நிலையில் உலகக் கோப்பைத் தொடர்களில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார்.  உலகக் கோப்பைத் தொடர்களில் இதுவரை அவர் 95 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.  டி20 உலகக் கோப்பைத் தொடரில் மட்டும் 30 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் 94 விக்கெட்டுகளை வீழ்த்திய யார்க்கர் கிங் மலிங்கா 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

Tags :
Advertisement