மிட்செல் மார்ஷ் , ஹேசில்வுட் அபாரம் : 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா..!
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கோண்டுள்ளது. இன்று இரு அணிகளுக்கும் இடையேயான 2 ஆவது டி20 போட்ட மெல்பெர்னில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தடுமாறியது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 68 ரன்களும் ஹர்ஷித் ராணா 35 ரன்களும் சேர்த்தார். இறுதியாக இந்திய அணி 18.4 ஓவர்களில் 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனையடுத்து 126 என்ற எளிய இலக்கை விரடிய ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் இலக்கை எட்டியது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 46 ரன்களும், டிராவிஸ் ஹெட் 28 ரன்களும், ஜோஷ் இங்கிலிஸ் 20 ரன்களும் சேர்த்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
 
  
  
  
  
  
 