ஹூதி கிளர்ச்சியாளர்கள் என நினைத்து சொந்த நாட்டு விமானம் மீதே துப்பாக்கிச்சூடு - அமெரிக்காவில் விமானிக்கு காயம்!
அமெரிக்காவில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் என நினைத்து சொந்த நாட்டு விமானம் மீதே துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சம்பவத்தில் விமானி காயமடைந்துள்ளார்.
இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையேயான போர் கடந்த 1 வருடங்களை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 45,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அண்டை நாடுகளான லெபனான், ஏமன், ஈராக் நாடுகளை சார்ந்த கிளர்ச்சியாளர்களை இஸ்ரேலை நோக்கி தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இஸ்ரேலுக்குச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஹூதிக்கள் தாக்குதல் மேற்கொண்டனர். இதன் காரணமாக அந்தக் கடற்பகுதியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹூதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை அன்று வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் செங்கடலின் மேலே எப்/ஏ-18 ரக போர் விமானம் ஒன்று இன்று பறந்து சென்றது. அமெரிக்காவை சேர்ந்த அந்த விமானத்தின் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 2 விமானிகளில் ஒருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு உள்ளன. அவர்கள் இருவரும் விமானத்தில் இருந்து வெளியே குதித்து உயிர் தப்பினர். இந்த நிலையில் அமெரிக்க எஃப்/ஏ-18 போர் விமானத்தை அந்நாட்டின் போர்க் கப்பல் தவறுதலாக சுட்டு வீழ்த்தியது தெரிய வந்தது.
இதுபற்றி அமெரிக்க ராணுவத்தின் மத்திய படை வெளியிட்ட செய்தி குறிப்பில், அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ஹாரி எஸ். ட்ரூமேன் என்ற விமானந்தாங்கி கப்பலில் இருந்து இந்த விமானம் பறந்து சென்றுள்ளது. யு.எஸ்.எஸ். கெட்டிஸ்பர்க் கப்பலில் இருந்தவர்கள் தவறுதலாக இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர்.” என விளக்கம் அளித்துள்ளது.