For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரயில் டிக்கெட் முன்பதிவில் குளறுபடி! ரயில்வே அமைச்சரிடம் கேள்வியெழுப்பிய பயணி!

09:13 PM Nov 04, 2024 IST | Web Editor
ரயில் டிக்கெட் முன்பதிவில் குளறுபடி  ரயில்வே அமைச்சரிடம் கேள்வியெழுப்பிய பயணி
Advertisement

ரயில் டிக்கெட் முன்பதிவில் குளறுபடி ஏற்பட்டதை குறிப்பிட்டு ரயில்வே அமைச்சரிடம் பயணி ஒருவர் கேள்வி எழுப்பியது பேசுபொருளாகியுள்ளது.

Advertisement

நாட்டில் ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆதலால் ரெயிலில் டிக்கெட் கிடைக்காமல் பல பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பயணிகளின் சிரமத்தை குறைக்க RAC டிக்கெட்டுகளை ரெயில்வே வழங்குகிறது. RAC டிக்கெட் என்பது ரத்து செய்யப்படுவதற்கு எதிரான இட ஒதுக்கீடு (Reservation Against Cancellation) என்பதன் சுருக்கமாகும்.

RAC டிக்கெட்டை பயன்படுத்தி ஒருவர் ரெயிலில் பயணிக்கலாம். அதே சமயம் படுக்கைக்கு ரெயில்வே உத்தரவாதம் அளிக்காது. அதாவது உங்களிடம் RAC டிக்கெட் இருந்தால், RAC ஒதுக்கீட்டின் கீழ் உள்ள மற்றொரு பயணியுடன் நீங்கள் ஒரு பெர்த்தை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அதே சமயம் உறுதிப்படுத்தப்பட்ட இருக்கைகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டால் RAC டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு கன்பார்ம் டிக்கெட் கிடைக்கும். இந்நிலையில் RAC டிக்கெட் குறித்து டெல்லியை சேர்ந்த ஜா என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் ரெயில்வே அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது பதிவில், தனது குடும்பத்தை சாத் விழாவை கொண்டாட டெல்லியிலிருந்து பீகாரில் உள்ள தர்பங்காவிற்கு செல்ல ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்தேன். முன்பதிவு செய்யும்போது டிக்கெட் காத்திருப்பு பட்டியல் 124 ஆக இருந்தது. பின்னர் அக்டோபர் 30 அன்று RAC 30 ஆகவும், நேற்று RAC 12 ஆகவும் இருந்தது. ஆனால் ரெயில் சார்ட் தயாரான பிறகு காத்திருப்பு பட்டியல் 18 ஆக உள்ளது எனக்கூறி எனது டிக்கெட் ரத்து செய்யப்பட்டது. இது என்ன மாதிரியான டிக்கெட் ரிசர்வேஷன் சிஸ்டம்? ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களே, சாத் பண்டிகையின் போது ஒரு பீகாரி தனது வீட்டிற்கு செல்ல முடியவில்லை என்றால் என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? என்று பதிவிட்டுள்ளார்.

இந்த புகார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ரெயில்வே துறை அவருக்கு பதிலளித்தது. இதனையடுத்து ஜா தனது எக்ஸ் பதிவில், "ரெயில்வே அதிகாரி என்னை தொடர்பு கொண்டு பேசினார். நாளை உங்கள் ஊருக்கு செல்வதற்கான ரெயில் பயணத்திற்கு தயாராக இருங்கள் என்று அவர் தெரிவித்தார். அவ்வாறு நடந்தால் ரெயில்வே அமைச்சருக்கு என் நன்றிகள்" என்று அவர் பதிவிட்டார்.

Tags :
Advertisement