Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

04:46 PM Dec 04, 2023 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.

Advertisement

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக உருவாகியுள்ள மிக்ஜாம் புயலினால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (4.12.2023), தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து துரிதமாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும், கூடுதலாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்திடுமாறும் கேட்டுக் கொண்டார். உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொண்ட பிறகு பாதிப்புகள் குறித்து உரிய கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு தேவைப்படும் உதவிகள் மத்திய அரசிடம் கேட்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று, மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

Tags :
AmitShahAndhra PradeshChennaiCycloneCyclone MichuangHEAVY RAIN FALLIndiaMichuangMK stalin Govtnews7 tamilNews7 Tamil UpdatesOrange alertTamilNaduweather forecast
Advertisement
Next Article