For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

25 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மாற்றுத்திறனாளிகளுக்கு அனுப்பிய அமைச்சர் உதயநிதி - பேராசிரியர் தீபக் நாதன் நெகிழ்ச்சி!

07:58 PM Dec 09, 2023 IST | Web Editor
25 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மாற்றுத்திறனாளிகளுக்கு அனுப்பிய அமைச்சர் உதயநிதி   பேராசிரியர் தீபக் நாதன் நெகிழ்ச்சி
Advertisement

25 லட்ச ரூபாய் மதிப்பு பொருட்களை கேட்காமல் அனுப்பிய தோழர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 1000 மாற்றுத்திறனாளிகள் சார்பாக நன்றி என டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவரும், மாற்றுத்திறனாளிகள் ஆர்வலருமான பேராசிரியர் தீபக்நாதன் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து பேராசிரியர் தீபக்நாதன் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “திடீர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இருந்து, அவசரமாக பார்க்க வேண்டும் என்று அழைப்பு வந்தது. சென்றவுடன், எழுந்து வந்து வரவேற்றார். ஆச்சர்யமாக இருந்தது. மாற்றுத்திறனாளிகள் வெள்ளத்தால் பாதித்திருப்பார்களே, விவரம் உண்டா என்றார்.

ஆம், மளிகை சாமான்கள் உடனடியாக கிடைத்தால் உதவியாக இருக்கும் முயற்சித்து வருகிறேன் என்றேன். உடனே எண்ணிக்கை விலாசம் கொடுங்கள், மாலைக்குள் வரும் எனச் சொல்லி, அவரே கதவை திறந்து வழி அனுப்பினார். ஒன்றும் புரியவில்லை எல்லாம் பட படவென நடந்து விட்டது.

இன்று 25 லட்சம் மதிப்புள்ள பொருள், எங்கள் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்களிடம் கொடுக்கப்பட்டது. புதிய உபகரணங்கள் கேட்டிருந்தோம். அனைத்தும் வரும் என்றார். நான் அரசியல்வாதி தருகிறார் என்றால் , எங்களோடு புகைப்படம் எடுப்பார் , பேசியது வீடியோவாக வரும் என நினைத்தேன். இது எதுவும் அவர் செய்யவில்லை. கொடுத்ததைக் கூட அவர் எங்கும் எழுதவில்லை. மாற்றுத்திறனாளிகளுடன் இந்நேரத்தில் நிற்கவேண்டும் என்று நினைத்து, அதை உடனே நிறைவேற்றிய அன்புக்கு நன்றி தோழர் 'உதயநிதி ஸ்டாலின்'.

வேறு என்ன வடிவில் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை. வலது கை கொடுத்தது, இடது கைக்கு தெரியாத முறை என்பார்கள்! அப்படியே நிகழ்த்திவிட்டார்.” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

மேலும் பேராசிரியர் தீபக் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “25 லட்ச ரூபாய் மதிப்பு பொருட்களை கேட்காமல் அனுப்பிய தோழர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 1000 மாற்றுத்திறனாளிகள் சார்பாக நன்றி.” என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement