பேருந்து கட்டண வித்தியாசத் தொகையை நடத்துநர் வழங்குவார் - அமைச்சர் சிவசங்கர்
கோயம்பேட்டில் பேருந்து ஏற முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டண வித்தியாசத் தொகை நடத்துநர் திருப்பித் தருவார் என போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பளவில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 30 ஆம் தேதி காலை 11 மணிக்கு திறந்து வைத்தார்.
இதையும் படியுங்கள் : விஜயகாந்த் நடிப்பில் ‘ஊமை விழிகள் 2’ – ஆபாவாணன் சூப்பர் அப்டேட்!
இதனிடையே அரசு விரைவுப் பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரத்திலிருந்து முன்பதிவு செய்த பயணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தங்கள் பயணத்தை மேற்கொள்ள போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்துள்ளது. இந்நிலையில், கோயம்பேட்டில் பேருந்து ஏற முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டண வித்தியாசத் தொகை திருப்பித் தரப்படும். பயணம் தொடங்கும்போதே நடத்துநர்களால் தொகை வழங்கப்படும் என போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.