கோயம்பேடு பொங்கல் சிறப்பு சந்தையில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு...!
சென்னை கோயம்பேடு சிறப்பு சந்தையில் களைகட்டிய பொங்கல் விற்பனையை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை கோயம்பேடு அங்காடியில் அமைக்கப்பட்டுள்ள பொங்கல் சிறப்பு சந்தையில்
இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்துறை
அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை
சந்தித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறியதாவது:
"பொங்கல் சிறப்பு சந்தை கடந்த ஆண்டிலிருந்து ஏழரை ஏக்கர் நிலப்பரப்பில்
செயல்பட்டு வருகிறது. கரும்பு ஏற்றி வரும் லாரிகளுக்கு 1500 கட்டணமாகவும் இஞ்சி மஞ்சள் ஏற்றி வரும் லாரிகளுக்கு ஆயிரம் கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. வரும் 17 ஆம் தேதி வரை இந்த சந்தை நடைபெற உள்ளது. இதுவரை 350 கரும்பு லாரிகள் மற்றும் 200 மஞ்சள் லாரிகள் வந்துள்ளது. வியாபாரிகளுக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் 3 இடங்களில் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் தூய்மை பணிக்காக 25 தூய்மை பணியாளர்கள் கூடுதலாக ஈடுபட்டு
வருகிறார்கள். மேலும், 17 ஆம் தேதி வரை 1000 லாரிகள் வரும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிறந்த முறையில் சந்தை நடைபெற்று வருகிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனர். ஒட்டுமொத்தமாக 550 லாரிகள் ஒரே நேரத்தில் வருகிறது. அதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்.
சிறப்பு காலம் விழா காலம் என்பதால் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் அதிகம் வணிகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் 900-த்தை தாண்டி லாரிகள் வரும் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது.
பேருந்து மாற்றம் என்பது கோயம்பேட்டில் ஒரு ஆண்டுகள் ஆகும். இந்த நிலையில், 24 ஆம் தேதியில் இருந்து ஆமினி பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்து முழுமையாக இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இன்றும் நாளையும் தற்காலிக உணவகங்கள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரை எந்தவிதமான திட்டமிடலும் கோயம்பேடு பேருந்து நிலையம் தொடர்பாக இல்லை. கிளாம்பாக்கத்தில் படிப்படியாக பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறோம். தற்போது 2 உணவகங்கள் அங்கு செயல்பாட்டில் உள்ளது உணவகங்கள் அதிகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோயம்பேடு குறித்து மக்கள் கருத்து கேட்ட பிறகு தான் எதற்கு பயன்படுத்தப்படும்
என்று முடிவு எடுக்கப்படும். மேலும்,கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது"
இவ்வாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்தார்.