Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 17-வது முறையாக நீட்டிப்பு!

03:28 PM Jan 29, 2024 IST | Web Editor
Advertisement

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 17வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது. இதனிடையே புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில்பாலாஜிக்கு அவ்வப்போது நீமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. மேலும் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவையும் நிதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனிடையே, செந்தில்பாலஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் (29.01.2024) முடிவடைந்ததால்,  புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன் மூலம் 17வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சுமார் 230 நாட்களை கடந்தும் ஜாமீன் கிடைக்காமல் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.  இதனிடையே, ஜாமீன்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி 2 ஆவது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.  சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.  செந்தில் பாலாஜி தாக்கல் செய்த இந்த ஜாமீன் மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Tags :
appealChennaiMadras High CourtMinisterMinister Senthil BalajiNews7 Tamil UpdatesSenthil balajiSessions Court | News7 Tamil
Advertisement
Next Article