Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அமைச்சர் செஞ்சி மஸ்தான் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து அதிரடி நீக்கம்!

01:51 PM Jun 11, 2024 IST | Web Editor
Advertisement

விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில்  இருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தானை  விடுவித்து புதிய மாவட்டச் செயலாளரை திமுக அறிவித்துள்ளது.

Advertisement

திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து செஞ்சி மஸ்தான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது..

“ திமுகவின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி வந்த நா. புகழேந்தி மறைவெய்திய காரணத்தால் கட்சிப் பணிகள் செவ்வனே நடைபெற டாக்டர் கவுதம் சிகாமணி விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதேபோல மற்றொரு அறிவிப்பில்...

“  திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி வரும் செஞ்சி கே.எஸ்.மஸ்தானை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக டாக்டர் ப.சேகரை (28, ஜெயபுரம் 2வது தெரு, திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம் 604 001) விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். “ என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Tags :
DMKDMK DISTRICT SECRETARYGautham Sigamaniminister senji masthansenji masthanvizhuppuram
Advertisement
Next Article