For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"ஐஐடி இயக்குநர் பேசியிருப்பது வருந்தத்தக்கது" - அமைச்சர் பொன்முடி பேட்டி

மாட்டுக் கோமியம் குறித்து ஐஐடி இயக்குநர் காமகோடியின் கருத்துக்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார்.
05:08 PM Jan 19, 2025 IST | Web Editor
 ஐஐடி இயக்குநர் பேசியிருப்பது வருந்தத்தக்கது    அமைச்சர் பொன்முடி பேட்டி
Advertisement

சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி வீழிநாதன், சமீபத்தில் மேற்கு மாம்பலத்திலுள்ள கோசாலையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் மாட்டின் கோமியம் மருத்துவ குணம் கொண்டது என்று பேசியிருந்தார். அவர் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

Advertisement

இதற்கு கண்டணம் தெரிவித்து தமிழ்நாடு மாணவர் கழகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், "மாட்டின் கோமியத்தை மனிதர்கள் அருந்தினால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கும் நிலையில், அறிவியலை ஊக்குவிக்கவேண்டிய இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் அறிவியலுக்கு எதிராக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது" என தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

“ஐஐடி போன்ற மிகச்சிறந்த கல்லூரியின் இயக்குநர் இப்படி பேசியிருப்பது வருந்தத்தக்கது. மாட்டின் கோமியம் உடலுக்கு கேடு என்று சொல்லிவரும் அறிவியல்பூர்வமான இந்த காலத்தில், அறிவியல் ரீதியான ஒரு கல்லூரின் இயக்குநர் இப்படி சொல்லியிருப்பது ஏன் என்று புரியவில்லை.

மக்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கல்லூரி இயக்குநர் ஆளுநர்போல் ஆகிவிட்டார் என தெரிகிறது. இப்படி அவர் பேசியிருப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி, முதலமைச்சர் முக ஸ்டாலின் வழியில் நடந்து வரும் தமிழ்நாட்டு மக்கள் அறிவியல் ரீதியாக சிந்திக்க கூடியவர்களாகவும், பகுத்தறிவு சிந்தனை உடையவர்களாகவும் உள்ளனர். இதனால், மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதுதான் நடைமுறை உண்மை”

இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement