அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!
தமிழக அமைச்சர்களில் வயதிலும், அரசியல் அனுபவத்திலும் மிகவும் மூத்தவர் அமைச்சர் துரைமுருகன். தற்போது 86 வயதாகும் அமைச்சர் துரைமுருகன் தொடர்ந்து காட்சிப்பணிகள், மக்கள் நலத்திட்ட பணிகளில் கவனம் செலுத்தி பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையும் படியுங்கள் : ‘Frame பாருங்க ஜி’ – அதிரடியாக வெளியானது ‘SK 23’ படத்தின் டைட்டில்!
இதனையடுத்து அவர் உடனடியாக கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அமைச்சர் துரைமுருகனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் துரைமுருகனை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாகவே அமைச்சர் துரை முருகனுக்கு அடிக்கடி உடல்நிலை சரி இல்லை என்று கூறப்படுகிறது.