For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
03:37 PM May 08, 2025 IST | Web Editor
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
Advertisement

தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று திடீரென இலாகா மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்வளத்துறையுடன் சேர்த்து, இனி சட்டத்துறையையும் அமைச்சர் துரைமுருகன் நிர்வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

Advertisement

இதையும் படியுங்கள் : “நாம ஜெயிச்சிட்டோம் மாறா…” – பிளஸ் 2 தேர்வில் அசத்திய 70 வயது மூதாட்டி!

இந்த நிலையில், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சளி பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள் : “மழை வர போகுதே..” – அடுத்த 6 நாட்களுக்கு கொட்ட போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

தற்போது துரை முருகனின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து துரைமுருகன் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறப்படுகிறது. இலாகா மாற்றப்பட்ட நிலையில் அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
Advertisement