வெங்காயத்துக்கான குறைந்தபட்ச #Export விலை ரத்து! - மத்திய அரசு அறிவிப்பு!
வெங்காய ஏற்றுமதிக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விலை வரம்பை மத்திய அரசு இன்று ரத்து செய்தது.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களான வெங்காயத்துக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக டன்னுக்கு 550 அமெரிக்க டாலராக மத்திய அரசு முன்பு நிர்ணயித்திருந்த நிலையில், இந்த குறைந்தபட்ச விலையை மத்திய அரசு இன்று ரத்து செய்தது உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் தனது அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : ‘நம்ம ஸ்கூல்.. நம்ம ஊருப் பள்ளி’ திட்டத்திற்கு #StateBankofIndia ரூ1.37 கோடி நிதியுதவி!
இன்று வெளியிடப்பட்ட இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெங்காயம் உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரத்தில் விரைவில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த உத்தரவு மறு உத்தரவு வரும் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.