மினி பேருந்துகளுக்கான டிக்கெட் விலையில் மாற்றம்!
மினி பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது
09:47 PM Jan 28, 2025 IST | Web Editor
Advertisement
மினி பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு 10 நிலை கொண்ட அரசாணை வெளியிட்டுள்ளது.
Advertisement
அதன்படி 2 முதல் 4 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்வதற்கான டிக்கெட் கட்டணம் 4 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு 5 ரூபாயும், 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.6 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு 7 ரூபாயும், 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு 8 ரூபாயும் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 கிலோ மீட்டரிலிருந்து 18 கிலோ மீட்டர் வரை பயணிப்பதற்கு டிக்கெட் கட்டணம் 9 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இறுதியாக 18 கிலோ மீட்டரில் இருந்து 20 கிலோ மீட்டர் வரை உள்ள பயணத்திற்கு டிக்கெட் கட்டணம் 10 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள இந்த மினி பேருந்துகளுக்கான புதிய கட்டண முறை இந்தாண்டு மே 1 முதல் நடைமுறைக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.