300 அடி பள்ளத்தாக்கில் விழுந்து ராணுவ வாகனம் விபத்து - 5 வீரர்கள் உயிரிழப்பு!
10:07 PM Dec 24, 2024 IST | Web Editor
Advertisement
ஜம்மு காஷ்மீரில் 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்து, ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
Advertisement
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லையில் 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்து ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை அலுவலகத்தில் இருந்து பனோய் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சாலையை விட்டு விலகியபோது விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ வாகனத்தில் 16 வீரர்கள் சென்றதாகக் கூறப்படுகிறது.
மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. ராணுவம், ஜம்மு காஷ்மீர் காவல்துறை, மீட்பு குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர்.